அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
றமழான் மாத விடுமுறையின் பின்னர் இன்ஷா அல்லாஹ் 28.07.2015 மாலை 05.00 மணிக்கு அக்கரைப்பற்று நூறுல் இர்ஃபான் அறபிக் கல்லூரி மீண்டும் ஆரம்பமாகியது.
இங்கு கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக குர்ஆன் மற்றும் கிதாப் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
அத்துடன் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு அக்கரைப்பற்று சுப்பர் ஸ்டார் கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட “கருங்கொடியின் ஈகைத்தென்றல்” இஸ்லாமியக் கலாசாரப் பாரம்பரியப் பெருவிழாவில் பங்குபற்றிய கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
நிகழ்வுகள் யாவும் அதிசங்கைக்குரிய ஷெய்குனா கலீபத்துல் ஹல்லாஜ் அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அல்குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) காதிரிய்யி, ஜிஸ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றன. நிகழ்வுகளில் கல்லூரியின் அதிபர், உப அதிபர், விரிவுரையாளர்கள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.