Archive by Author | admin

குத்புனா முஹம்மத் ஜலாலுத்தீன் (றஹ்) அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

குத்புல் அக்தாப், அஸ்ஸெய்யித் அஷ்-ஷெய்க் முஹம்மது ஜலாலுத்தீன் (றஹ்) காதிரிய்யி, ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் 48ஆவது கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும்

வருடா வருடம் நடைபெற்றுவரும் இம்மஜ்லிஸ் இன்ஷா அல்லாஹ் இம்முறையும் முரீதீன்கள் முஹிப்பீன்களால் அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்மா மஸ்ஜிதில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

05.12.2015 சனிக்கிழமை அஸர் தொழுகையுடன் கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகும். அதே தினம் மஃரிபுடன் பயான் நிகழ்சிகள் ஆரம்பமாகும்

07.12.2015 வரை பயான் நிகழ்வுகள் நடைபெறும்.

08.12.2015 மாலை 04.00 தொடக்கம் 06.00 வரை பிறை FM இல் நேரடி அஞ்சல் செய்யப்படும்

இறுதி நாளான 09.12.2015 புதன்கிழமை சஹன் சாப்பாடு வழங்கப்படும்

நிகழ்வுகள் யாவும் கலீபத்துல் ஹல்லாஜ் குத்புஸ் ஸமான் அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அப்துல் மஜீத் பின் அப்துஸ் ஸமத் ஆலிம் மக்கத்தார் (றஹ்) காதிரிய்யி, ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும்.

ஜனாஸா அறிவித்தல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
05.11.2015 வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் நீர்கொழும்பில் வபாத்தாகிய அல்ஹாஜ் A.S.M.ஸாதிக் JP அவர்களின் ஜனாஸா 06.11.2015 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. அல்லாஹுத் தஆலா அன்னாரின் சகல பிழைகளையும் பொறுத்து நாயகம் (ஸல்) அவர்களின் சபாஅத்தையும் ஜன்னதுல் பிர்தெளஸ் ஐயும் வழங்குவானாக. ஆமீன்.

ஜனாஸா தொடர்பான சகல செயற்பாடுகளும் குத்புனா அப்துல் மஜீத் மக்கத்தார் நாயகம் அவர்களால் முன்னின்று நடாத்தப்பட்டன.