Archive by Author | admin

Muharram Day

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு

15.10.2015 வியாழக்கிழமை இஷாத் தொழுகையைத் தொடர்ந்து அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஹல்லாஜ் மகாம் ஜும்ஆ பள்ளிவாசலில் முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு விஷேட நிகழ்வுகள் ஒழுங்கு இடம்பெற்றன.

கலீபத்துல் ஹல்லாஜ் குத்புனா அஷ்ஷெய்க் அஸ்ஸெய்யித் அப்துல் மஜீத் மக்கத்தார் வாப்பா (றஹ்) அவர்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் நூறூல் இர்ஃபான் அறபிக் கல்லூரி அதிபர் மௌலவி அல்ஹாஜ் A.K. நழீம் (ஷர்க்கி) BA, PGDE, JP கல்லூரியின் பிரதி அதிபர் மௌலவி நிஷாத்(ஷர்க்கி) BA உட்பட இன்னும் உலமாக்கள், முரீதீன்கள் முஹிப்பீன்களும் கலந்து சிறப்பித்தனர்.

நூறூல் இர்ஃபான் அறபிக்கல்லூரி மாணவர்களின் நிகழ்ச்சிகள், பயான் மற்றும் துஆப் பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன் இன்றைய தினம் ஹதீஸ்; மத்ஹப் உட்பட தஸவ்வுஃப் (மெய்ஞ்ஞானத்தி)ற்குரிய இமாம்களும் கௌரவிக்கப்பட்டனர்.  அத்துடன் குத்புனா அஷ்ஷெய்க் அஸ்ஸெய்யித் அப்துல் மஜீத் மக்கத்தார் வாப்பா (றஹ்) அவர்களின் விஷேட உரையும் இடம் பெற்றது.