Archive by Author | admin

Sunan Ibnu Maajah Majlis

பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம்.

 

முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய ஹதீஸ் தொகுப்பான ஸுனன் இப்னு மாஜா ஹதீஸ் கிரந்த பாராயண நிகழ்வுகள் அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் அமைந்துள்ள மஹ்ழறத்துல் காதிரிய்யி ஜும்ஆ மஸ்ஜிதில் அதி சங்கைக்குரிய குத்புஸ் ஸமான் ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி) காதிரிய்யி, ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அன்னவர்களால் 17.02.2014 (ஹிஜ்ரி 1435 றபீஉல் ஆகிர் பிறை 16) ஆம் திகதி திங்கட்கிழமை   மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து பிற்பகல் 07.05 மணியளவில் வைபவரீதியாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கண்ணியமிக்க மௌலவி AR ஸபா முஹம்மத் (நஜாஹி), மௌலவி AK நழீம் (ஷர்க்கி) ஆகியோரும்  முரீதீன்களும்  முஹிப்பீன்களும் கலந்து கொண்டனர்.

ஸுனன் இப்னு மாஜா பாராயண நிகழ்வில் அதி உன்னத மேன்மைக்குரிய, பாகிபுபில்லாஹ், குத்புல்-அக்தாப், தாஜுல் அஹ்லுல்பைத், கலீஃபத்துல் ஹல்லாஜ், அஷ்-ஷெய்க் அப்துல் மஜீத் மக்கத்தார் நாயகம் றலியல்லாஹு அன்ஹு அவர்களால் உரையாற்றப்பட்ட மார்க்க உபந்நியாசங்களின் தொகுப்பு.

01.       02.       03.      04.      05.      06.      07.      08.      09.      10.      11.      12.

Ibnu Maajah Recitation-01

Ibnu Maajah Recitation-02

Ibnu Maajah Recitation-03

Ibnu Maajah Recitation-04

Ibnu Maajah Recitation-05

தகவல் : ஆசிரியர் MACM ஜுஹைஸ்
புகைப்படங்கள்  : அல்ஹாஜ் மௌலவி A.R. ஸஃபா முஹம்மத் (நஜாஹி)

கௌரவிப்பு

இந்திய சன்மார்க்க பேரறிஞர் ஷம்சுல் உலமாஃ,  அபுத்தலாயில் M.ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி MA அவர்களுக்கு அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஹல்லாஜ் மக்காம் ஜும்ஆ மஸ்ஜிதில் அதிசங்கைக்குரிய ஷெய்குனா கலீபத்துல் ஹல்லாஜ் குத்புஸ்ஸமான் அப்துல் மஜீத் மக்கத்தார் (றலி) (காதிரிய்யி, ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி) அவர்களால் விசேட வரவேற்பு வழங்கப்பட்டு “தாஜுல் உலூம்” எனும் கௌரவப் பட்டமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் கண்ணியத்திற்குரிய மௌலவிமார்களான  AR ஸபா முஹம்மத் (நஜாஹி), AK நழீம் (ஷர்க்கி), ஸிராஜ் (நஜாஹி), அக்கரைப்பற்று மாநகரசபை மேயர் மேன்மைதங்கிய A அஹமத் ஸகி, HEDS International Hallaj Building உரிமையாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய MAA வாஹித் ஆசிரியர் உட்பட இன்னும் பல ஆசிரியர்கள் முரீதீன்கள் மற்றும் முஹிப்பீன்களும் கலந்து சிறப்பித்தனர்.

00

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

14

15

16

17

நன்றி : SH.இஸ்பாத் அஹமத், தாருஸ் ஸஃபா