Archives

Kandoori Majlis

ஸாவியத்துல் காதிரிய்யா, நாவலப்பிட்டி

கந்தூரி நிகழ்வுகள்

ஹிஜ்ரி 1377 ஜமாதுல் ஆகிர் பிறை 19 (1958.01.10) வெள்ளிக்கிழமை இரவு அந்தர தீவில் வபாத்தாகி அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்ட அல்குத்ப், அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க், ஷம்சுல் உலமா பஹ்றுல் இல்ஹாம் அப்துர் ரஹ்மான் மௌலானா கோயாத் தங்கள் (ரஹ்) ஐதுரூஸிய்யி அவர்களின் 58வது வருட கதமுல் குர்ஆன் தமாம் கடந்த 02.04.2016 சனிக்கிழமையிலும் கந்தூரி வைபவம் ஞாயிற்றுக்கிழமையிலும் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வுகள் அனைத்தும் சங்கைக்குரிய குத்புனா ஹல்லாஜுல் மன்ஸூர் (ரஹ்) அவர்களின் ஏக கலீபா அல்குத்ப், அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க், ஷம்சுல் உலமா பஹ்றுல் இல்ஹாம் அப்துல் மஜீத் பின் அப்துஸ்ஸமத் ஆலிம் மக்கத்தார் (ரஹ்) காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்றது.

நிகழ்வுகளில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் முரீதீன்கள் மற்றும் முஹிப்பீன்கள் கலந்து சிறப்பித்தனர்.12 11 10 09 08 07 06 05 04 03 02 01

 

மௌலித் தமாமும் கந்தூரி நிகழ்வுகளும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

அட்டாளைச்சேனையில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் கண்ணியத்துக்குரிய அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அல்குத்ப் மஸ்தான் சாகிபு (ரஹ்) அன்னவர்களின் மக்பரா சரீபில் கண்ணியத்துக்குரிய ஷெய்குனா அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அல்குத்ப் கலீபத்துல் ஹல்லாஜ் அப்துல் மஜீத் பின் அப்துஸ் ஸமத் ஆலிம் மக்கத்தார் (ரஹ்) காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி அன்னவர்களின் வழிகாட்டலில் அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா பள்ளிவாசலும் நூறுல் இர்ஃபான் அரபிக் கல்லூரியும் இணைந்து ஈருலகம் போற்றும் எங்கள் உயிரிலும் மேலான பூமான் நபியின் புனிதமிகு மீலாத் பெருவிழாவையும் கந்தூரி வைபவத்தையும் ஹிஜ்ரி 1437 ரபீஉல் அவ்வல் பிறை 15 ஞாயிற்றுக்கிழமை / 2015.12.27 ஆம் திகதி நடாத்தியது.

மேற்படி மௌலித் தமாமும் கந்தூரி நிகழ்வுகளும் குறித்த தினம் காலை 10.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு ளுஹர் தொழுகையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வுகளில் ஏராளமான முரீதீன்கள் மற்றும் முஹிப்பீன்கள் கலந்து கொண்டனர்.

01 070809100203040506