Archives

Kandoori – Kuthubuna Abdhus Samad Moulana (Sinna Moulana) Rali.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹு வபரக்காதுஹு

குத்புனா அஸ்ஸெய்யித் அப்துஸ் ஸமத் மௌலானா (சின்ன மௌலானா) அவர்களின் பெயரிலான கந்தூரி வைபவம்- அக்கரைப்பற்று

24.07.2015 வெள்ளிக்கிழமை பாத்திஹா ஓதப்பட்டதுடன் 25.07.2015 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் இலங்கை மற்றும் உலகில் உள்ள அனைத்து இறைநேசர்களுக்குமாக ஓதப்பட்டது.

மேலும் நாட்டின் சமாதானம் சுபீட்சத்திற்கான துஆவுடன்  லுஹர் தொழுகையின் பின் சாப்பாடு வழங்கப்பட்டது.

நிகழ்வுகள் யாவும் அதிசங்கைக்குரிய ஷெய்குனா கலீபத்துல் ஹல்லாஜ் அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அல்குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) காதிரிய்யி, ஜிஸ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றன.

சுனன் இப்னு மாஜா பாராயணம்

சுனன்  இப்னு மாஜா பாராயணம்

கடந்த 17.05.2015 ஞாயிறு பின்னேரம் திங்கட் கிழமை இரவு மஃரிப் தொழுகையின் பின்னர் சுனன் இப்னு மாஜா பாராயண நிகழ்வுகள் வைபவ ரீதியாக அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலில் அதிசங்கைக்குரிய ஷெய்குனா குத்புஸ்ஸமான் அப்துல் மஜீத் மக்கத்தார் நாயகம் (றஹ்) அவர்களினால் ஆரம்பித்து வைக்கபட்டது.

இன்ஷா அல்லாஹ், தொடர்ச்சியாக 12 நாட்கள் நடைபெறக்கூடிய இம்மஜ்லிஸில் பின்வரும் தலைசிறந்த மார்க்க அறிஞர்கள் உபந்நியாசம் நிகழ்த்துவார்கள்.

1. அல்ஹாஜ் மௌலவி ஏ.ஆர். ஸபா முஹம்மத் (நஜாஹி)- முகத்தமுல் காதிரி அவர்கள்
முதல்வர்- கல்முனை பாத்திமத்துஸ் ஸஹறா பெண்கள் அரபுக்கல்லூரி
2. அல்ஹாஜ் மௌலவி ஏ.கே. நழீம் (ஷர்க்கி) ஆசிரியர் BA, JP
முதல்வர்- அக்கரைப்பற்று நூறுல் இர்பான் அரபுக்கல்லூரி
3. மௌலவி ஏ.சீ.எம். நிஷாத்(ஷர்க்கி) BA,
உப அதிபர்- அக்கரைப்பற்று நூறுல் இர்பான் அரபுக்கல்லூரி

மற்றும் பல உலமாக்கள்

 

சுனன்  இப்னு மாஜா பாராயண தமாம்
மற்றும்
மீலாத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்

இன்ஷா அல்லாஹ் 2015.05.29ம் திகதி வெள்ளிக்கிழமை சுனன்  இப்னு மாஜா பாராயண தமாம் நிகழ்வுகளும் உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் உதய தின விழாவும் அக்கரைப்பற்று ஹல்லாஜ் கலாச்சார திறந்த வெளியில் நடைபெறும்.

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்களின் அடிச்சுவட்டைத் தழுவிய மாபெரும் மீலாத் விழா கலீபத்துல் ஹல்லாஜ் ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) அவர்களின் தலைமையில் இடம்பெறும்.

001W
002W
003W
004W