Archives

Flag Hoisting 2014

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

கடந்த 07,08.10.2014 ஆகிய தினங்களில் அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலில் கொடியெற்ற நிகழ்வுகள் மிகவும் சிறப்பான முறையில் வெகு விமர்சையாக நடைபெற்றன.

 

15 14 13 12 11 10 9 8 7 6 5 4 3 2

%%wppa%% %%slideonly=21%%

Grand Feast 1434 (2013)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

கடந்த 18.10.2013 தொடக்கம் 29.10.2013 வரை அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலில் அல்-குத்ப், அஸ்-ஸெய்யித், அஷ்-ஷெய்க், ஷம்சுல் உலமா, பஹ்றுல் இல்ஹாம், அல்-ஹாபிழ் ஹல்லாஜுல் மன்ஸூர் நாயகம் (றலி) காதிரிய்யில், ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின்  09வதும்,

அல்-குத்ப்,  அஸ்-ஸெய்யித், அஷ்-ஷெய்க், ஷம்சுல் உலமா, பஹ்றுல் இல்ஹாம், அல்-ஹாபிழ் முஹம்மத் ஜலாலுத்தீன்  நாயகம்(றலி) காதிரிய்யில், ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின்  46வதும்

வருட கத்தமுல் குர்-ஆன், கந்தூரி வைபவங்கள் அதி சங்கைக்குரிய குத்புஸ் ஸமான் கலீபத்துல் ஹல்லாஜ் அல்-குத்ப், அஸ்-ஸெய்யித், அஷ்-ஷெய்க், ஷம்சுல் உலமா, பஹ்றுல் இல்ஹாம் அப்துல் மஜீத் பின் அப்துஸ் ஸமது ஆலிம் மக்கத்தார் நாயகம் (றலி) காதிரிய்யில், ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் வழிகாட்டலின் கீழ் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.

18.10.2013 துல்ஹஜ் பிறை 12 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணியளவில் இஸ்லாமிய இலட்சினையான கொடி ஷெய்குனாவின் முரீதீன்களான ஜனாப் M.I.பியாஸ் ஏந்திக் கொடுக்க ஜனாப் M.A.A.வாஹித் (MSc) (ADE-Science), HEDS International Hallaj Building உரிமையாளர் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.

அன்று தொடக்கம் 10 நாட்கள் குத்புனா ஹல்லாஜ் மன்ஸூர் நாயகம் (றலி) அவர்களின் அன்புப் பேரர் அஸ்-ஸெய்யித் மௌலவி P.A. முஹம்மத் மஹ்றூப் (லத்தீபி) தங்கள் அவர்களின் தலைமையில் தலைசிறந்த மார்க்க அறிஞர்களால் உபந்நியாசங்கள் நிகழ்த்தப்பட்டன.

28.10.2013 காலை 10:00 மணி தொடக்கம் கத்தமுல் குர்ஆனும் அதே தினம் மாலை 04:00 மணி தொடக்கம் கத்தமுல் குர்ஆன் தமாம் மற்றும் துஆப் பிரார்த்தனையும் நடைபெற்றன.

29.10.2013 செவ்வாய்க்கிழமை காலை 08:00 மணி முதல் மௌலீது வைபவமும் நடைபெற்றன. நாட்டின் சுபீட்சம் மற்றும் சமாதானத்திற்கான துஆ கலீபத்துல் ஹல்லாஜ் மக்கத்தார் வாப்பா நாயகம் (றலி) அவர்களால் ஓதப்பட்டு கந்தூரியும் வழங்கப்பட்டது.

கந்தூரி வைபவங்கள் ஷேகுனாவின் சாதிக்கான முரீதாகிய அல்-ஹாஜ் A.S.M சாதிக் (JP-All Island) அவர்களின் மேற்பார்வையின் கீழ் இனிதே நடைபெற்றன.

நிகழ்வுகளில் மாண்புமிகு அமைச்சர் ALM அதாஉல்லாஹ், குத்புனா மக்கத்தார் நாயகம் (றலி) அவர்களின் மருமகனும் மாண்புமிகு உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமாகிய அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யித் MH அப்துஸ் ஸமது மேன்மை தங்கிய மேயர் A அஹமட் ஸகீ,   நாட்டின் பல பாகங்களிலிருந்தும், மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் முரீதீன்கள், முஹிப்பீன்கள் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.

மேற்படி நிகழ்வுகளுடன் தொடர்பான புகைப்படங்கள் சில,

01

02

03

04

05

07

08

09

10

11

12

13

14

15

16

17

19

20

21

22

%%wppa%% %%slideonly=18%%

%%wppa%% %%slideonly=19%%