சுனன் இப்னு மாஜா பாராயணம்
கடந்த 17.05.2015 ஞாயிறு பின்னேரம் திங்கட் கிழமை இரவு மஃரிப் தொழுகையின் பின்னர் சுனன் இப்னு மாஜா பாராயண நிகழ்வுகள் வைபவ ரீதியாக அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலில் அதிசங்கைக்குரிய ஷெய்குனா குத்புஸ்ஸமான் அப்துல் மஜீத் மக்கத்தார் நாயகம் (றஹ்) அவர்களினால் ஆரம்பித்து வைக்கபட்டது.
இன்ஷா அல்லாஹ், தொடர்ச்சியாக 12 நாட்கள் நடைபெறக்கூடிய இம்மஜ்லிஸில் பின்வரும் தலைசிறந்த மார்க்க அறிஞர்கள் உபந்நியாசம் நிகழ்த்துவார்கள்.
1. அல்ஹாஜ் மௌலவி ஏ.ஆர். ஸபா முஹம்மத் (நஜாஹி)- முகத்தமுல் காதிரி அவர்கள்
முதல்வர்- கல்முனை பாத்திமத்துஸ் ஸஹறா பெண்கள் அரபுக்கல்லூரி
2. அல்ஹாஜ் மௌலவி ஏ.கே. நழீம் (ஷர்க்கி) ஆசிரியர் BA, JP
முதல்வர்- அக்கரைப்பற்று நூறுல் இர்பான் அரபுக்கல்லூரி
3. மௌலவி ஏ.சீ.எம். நிஷாத்(ஷர்க்கி) BA,
உப அதிபர்- அக்கரைப்பற்று நூறுல் இர்பான் அரபுக்கல்லூரி
மற்றும் பல உலமாக்கள்
சுனன் இப்னு மாஜா பாராயண தமாம்
மற்றும்
மீலாத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
இன்ஷா அல்லாஹ் 2015.05.29ம் திகதி வெள்ளிக்கிழமை சுனன் இப்னு மாஜா பாராயண தமாம் நிகழ்வுகளும் உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் உதய தின விழாவும் அக்கரைப்பற்று ஹல்லாஜ் கலாச்சார திறந்த வெளியில் நடைபெறும்.
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்களின் அடிச்சுவட்டைத் தழுவிய மாபெரும் மீலாத் விழா கலீபத்துல் ஹல்லாஜ் ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) அவர்களின் தலைமையில் இடம்பெறும்.