Archives

Noorul Irfan Arabic College

புதிய மாணவர்களுக்கான அனுமதி -2014-1435

الكلية نورالعرفان العربية – اكاربياتو

நூறுல் இர்ஃபான் அறபுக் கல்லூரி

மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாசல்
ஹல்லாஜ் மகாம் – அக்கரைப்பற்று

ஹிஜ்ரி 1435 ஜமாதுல் அவ்வல் பிறை 02 (03.02.2014) திங்கட்கிழமை அஸருக்குப் பிற்பாடு சுமார் 4:30 மணியளவில் அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசலில் அமைந்திருக்கும் ஹல்லாஜ் கலாச்சார தற்காலிகக் கட்டடத்தில் நூறுல் இர்ஃபான் அறபுக்கல்லூரியின் ஆரம்ப விழா நடைபெற்றது.

 நிகழ்வுகள் அனைத்தும் அதிசங்கைக்குரிய கௌதுனா குதுபுல் அக்தாப் பாகிபுபில்லா கலீஃபத்துல் ஹல்லாஜ் அஷ்-ஷெய்க் முஹியத்தீன் அப்துல் மஜீத் பின் அப்துஸ் ஸமது ஆலிம் மக்கத்தார் (றலி) காதிரிய்யி, ஜிஷ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் தலைமையில் நடைபெற்றன.

நிகழ்வுகளில் கண்ணியத்திற்குரிய மௌலவி ஏ.ஆர். ஸஃபா முஹம்மத் (நஜாஹி), கண்ணியத்திற்குரிய மௌலவி ஏ.கே.நழீம் (ஷர்க்கி), புதிய மாணவர்களின் பெற்றோர் உட்பட இன்னும் முரீதீன்களும் முஹிப்பீன்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வுகளின் ஆரம்பமாக தலைமையுரை ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் நாயகம் (றலி) அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அதில் ஷெய்குனா அவர்கள் இந்த மத்ரஸா ஆரம்பிக்கப்படுவதன் நோக்கம் பற்றிக் குறிப்பிட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து மௌலவி ஸஃபா முஹம்மத் அவர்களும் பின் மௌலவி நழீம் அவர்களும் உரையாற்றினார்கள்.

அதன் பின் ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் நாயகம் (றலி) அவர்களினால் துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டது. தலைவராக அதிசங்கைக்குரிய ஷெய்குனா அப்துல் மஜீத் மக்கத்தார் நாயகம் (றலி) அவர்களும் போஷகர்களாக கண்ணியத்திற்குரிய அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ், அக்கரைப்பற்று மாநகர சபையின் மேன்மைமிக்க மேயர் அதாஉல்லாஹ் அஹமட் ஸகீ, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் பிரத்தியேக செயலர் கண்ணியத்திற்குரிய அஸ்-ஸெய்யித் அப்துஸ் ஸமது (இம்தியாஸ்) ஆகியோரும் நிர்வாக சபையின் செயலர் ஆக கண்ணியத்திற்குரிய ஆசிரியர் எம்.ஏ.ஸீ.எம்.ஜுஹைஸ் அவர்களும் பொருளர் ஆக கண்ணியத்திற்குரிய எம்.ஏ.ஆப்தீன் அவர்களும் உபசெயலர் ஆக கண்ணியத்திற்குரிய ஆசிரியர் எம்.எல். மஹ்பூர் அவர்களும் பொறுப்பாளராக கண்ணியத்திற்குரிய எம்.ஏ.எம்.இப்றாஹீம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் நிர்வாக சபை அங்கத்தவர்களாக கண்ணியம்மிக்கவர்களான ஏ.வாஹித்-பிரதிக் கல்விப் பணிப்பாளர்; ஏ. ஸலாம் ஆசிரியர், அல்ஹாஜ் இஸ்ஹாக் ஆசிரியர், டிஸ்மத் ஆசிரியர், பியாஸ், ஹுஸைன் ஆசிரியர், ஸவாஹிர் ஆசிரியர், நிஷாட், எம்.ஏ.எம்.நிஸ்ஃபர் ஆசிரியர், மௌலவி நழீம், மௌலவி ஸஃபா முஹம்மத் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

இன்றைய நிகழ்வுகளில் 17 புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

MADRASA NOORUL IRFAN ARABIC COLLEGE

மதரஸா நூறுல் இர்ஃபான் அறபுக்கல்லூரி,
(MADARASA NOORUL IRFAN ARABIC COLLEGE),
(குன்னதேறி, ஆல்வாய், இறனைக்குளம், கேரளா, இந்தியா)

Figure _ 11_Noorul Irfan Arabic College

குத்புனா ஜலாலுத்தீன் ஷெய்க் அவர்கள் 1909 ஆம் ஆண்டு அந்த்ரோத் தீவு  எனும் ஊரில் பிறந்தார்கள். அல்குத்ப்-ஷெய்குனா அஸ்-ஸெய்யித் முஹம்மத் ஜலாலுத்தீன் அல்-ஐதரூஸிய்யி ஜீலிய்யுன் நூரிய்யி அவர்கள் A.I.முஹம்மத் முத்துக்கோயாத்தங்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

இவரது அயராத முயற்சியால் ஹிஜ்ரி 1387 ரபீயூல் அவ்வல் (AD 1967)ல் நூறுல் இர்பான் என்ற ஒரு அறபுக் கல்லூரியை ஆழுவாய் (குன்னத்தேறி) ஆரம்பித்து வைத்தார்கள். அவரில் நல்லெண்ணம் கொண்ட அவரை நன்கு தெரிந்தவர்களும், ஏனைய கல்வியில், ஞானத்தில் ஆர்வம் கொண்டவர்களும் இந்த அறபுக் கல்லூரிக்கு உதவினர். ஷெய்குனா ஜலாலுத்தின் அவர்களின் பாத்தினுக்குரிய கிலாஃபத்தைப் பெற்ற ஹல்லாஜ் மன்ஸூர் P.A ஸெய்யித் முஹம்மத் கோயாத் தங்கள் அவர்கள் இம்மதரஸாவிற்கும், மக்பராவிற்கும் தன்னாலான உதவிகளைச் செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஷெய்குனா ஜலாலுத்தீன் குத்திஸ்ஸிர்ரஹூ அவர்கள் மறைந்து நாப்பதாவது நாள் இவரின் கட்டளைப்படி இவரைச் சேர்ந்த மக்களால் அன்னாரின் ழாஹிருக்குரிய கிலாஃபத்தை பெற்ற இவர் மகனான ஷெய்குனா ஷிஹாபுத்தின் கோயாத் தங்கள் M.A. அவர்களே இந்த நூறுல் இர்பான் அறபுக் கல்லூரியின் அதிபராக இருந்து சேவை செய்து வருகிறார். இவரது அயராத முயற்சியால் கலிக்கட் சர்வகலாசாலையோடு இணைந்து கணிதம், விஞ்ஞானம் மற்றும் சகல துறைகளிலும் ஆலிம் அல் இர்பானி என்ற பட்டத்துடன் பட்டதாரிகள் இந்த அரபுக் கல்லூரியிலிருந்து வெளியாவது பாராட்டத்தக்க விடயமாகும். இந்த அறபுக் கல்லூரியில் கல்வி கற்கும் காலம் 08 வருடங்களாகும்.

1967ல் ஏப்ரலில் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி ஸெய்யித் ஸெய்னுத்தீன் M.K. செரிய கோயாத் தங்கள் இருவரும் பாடங்களை ஆரம்பித்து நடத்தினர். 1983 தொடக்கம் இற்றை வரை ஜலாலுத்தீன் ஷெய்குனாவின் மகன் அஷ்-ஷெய்க் ஷிஹாபுத்தீன் கோயாத் தங்கள் பாடங்களை நடத்தி வருகின்றார்.

இங்கு நடக்கின்ற ஒவ்வொரு பட்டமளிப்பு விழாவின் போதும் ஹைதராபாத் அப்துல் காதிர் ஸூஃபி நாயகத்தின் பேரர் கலந்து சிறப்பிப்பது குறிப்பிடத்தக்கது.

இம்மதரஸாவில் ஃபிக்ஹ், ஹதீஸ், தஃப்ஸீர், மஆனி, மன்திக், தாரீஃக், அல் அதப் போன்ற பாடங்களுடன் இல்முத் தஸவ்வுஃப் (மெய்ஞ்ஞானவியல்) விஷேடமாக கற்பிக்கப்படுகின்றது. ஏனெனில் இதன் ஸ்தாபகரான குத்புனா அஷ்ஷெய்க் அஸ்ஸெய்யித் முஹம்மத் ஜலாலுத்தீன் குத்திஸ்ஸிர்ரஹூ அவர்கள் இல்முத் தஸவ்வுஃபில் புகழ் பெற்ற ஒருவராக இருந்ததால் அவர் ஆரம்பித்த கல்லூரிக்கு நூறுல் இர்ஃபான் -மெய்ஞ்ஞான ஒளி என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இவரிடம் சிறு வயதிலிருந்தே இல்முத் தஸவ்வுஃபைக் கற்று முதன்மை அடைந்த குத்புனா ஹல்லாஜூல் மன்ஸூர் P.A ஷெய்க் முஹம்மத் கோயாத்தங்கள் அவர்கள் பாத்தினுக்குரிய கிலாஃபத்தைப் பெற்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.