அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். வபர.
1979 ஆம் ஆண்டு அக்கரைப்பற்று சின்ன( பட்டின)ப் பள்ளிவாசலின் அனுமதி பெறப்பட்டு கட்டப்பட்ட மஹ்ழறத்துல் காதிரிய்யா பள்ளிவாசலில் பல்வேறுபட்ட நல்ல நோக்கங்களை கருத்திற்கொண்டு; குத்பா ஓதுவதற்காக கடந்த 01.01.2013ல் அனுமதிகோரப்பட்டது. ( கடிதம் -01)

அக்கரைப்பற்று மஹ்றத்துல் காதிரிய்யா தக்கியாவில் (ஜும்ஆ பள்ளிவாசலில்) குத்பா நடத்துவதற்காக அனுமதிகோரி அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அனுப்பப்பட்ட கடிதம்
அதனைத் தொடர்ந்து கடந்த 2013.02.02 ஆம் திகதி தேதியிட்ட 727 ஆம் இலக்க கடிதத்தின் மூலம் அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாசலால், மேற்படி மஹ்ழறத்துல் காதிரிய்யா பள்ளிவாசலில் குத்பா ஓதுவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லையென மறுமொழி வழங்கப்பட்டது ( கடிதம் -02).

அக்கரைப்பற்று மஹ்றத்துல் காதிரிய்யா தக்கியாவில் (ஜும்ஆ பள்ளிவாசலில்) குத்பா நடத்துவதில் ஆட்சேபனை இல்லையென அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாசலால் வழங்கப்பட்ட கடிதம்
அதனைத் தொடர்ந்து கடந்த 12.04.2013 வெள்ளிக் கிழமை முதல் அக்கரைப்பற்று மஹ்ழறத்துல் காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலில் குத்பா ஓதப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
முதலாவது குத்பாப் பேருரையை அதிகண்ணியமிக்க ஷெய்குனா குத்புஸ்ஸமான் அப்துல் மஜீத் மக்கத்தார் வாப்பா நாயகம் (றலி) அவர்கள் நிகழ்த்தினார்கள்.
%%wppa%% %%slideonlyf=16%% %%align=center%%