ஷெய்குனா முஹம்மத் ஸூபி கூத்தாரி(றலி)
பிறப்பு மற்றும் கல்வி
ஹிஜ்ரி 1317ல் (கி,பில்1908) துல்கஃதா பிறை 26 ல் திராவன்கூரின் ஒரு பகுதியான கோட்டாரில் பீர் முஹம்மத் அவர்களுக்குக் மீரம்மை அவர்களுக்கும் மகனாக பிறந்தார்கள். ஏழு வயதாகும் போது அல்குர்ஆனைக் கற்ற ஷெய்குனா அவர்கள் 10 வயதாகும்போது தமிழ் மலையாளம் ஆகியவற்றிலே கைதேர்ந்தவர்களாக ஆனார்கள்.மேலைபாளையம் புதுக்குடியில் அமைந்துள்ள அந்நூறுல் முஹம்மதிய்யா மத்ரஸாவில் தனது கல்வியைத் தொடர்ந்தார்கள், பின்னர் சில காலங்களின் பின் ஹைதராபாத் ஷெய்க் நாயகத்திடம் பைஅத்தைப் பெற்றதோடு ஆன்மீகத்தின் உச்சத்தை அடைந்தார்கள். இவர்கள் தொடுப்புழத்தில் இருக்கும் போது, ஷெய்குனா பானி (குத்புனா முஹம்மது ஜலாலுத்தீன்) (றலி) அவர்கள் ஷைகுனா கூத்தாரி(றலி) அவர்களைச் சந்தித்து பைஅத்தைப் பெற்றுக் கொண்டார்கள். ஷைகுனா கூத்தாரி(றலி) அவர்கள் ஷைகுனா பானி (றலி) அவர்களின் காதிரிய்யா மற்றும் ஜிஷ்திய்யா தரீக்காக்களின் ஷெய்காவார்கள்.
சேவைகள் :
ஆன்மீக உயர்விலும் தூய்மையான வாழ்க்கையிலும் தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு ஒரு வாழும் உதாரணமாக அன்னார் விளங்கினார்கள். ஷெய்குனா அவர்கள் ஒரு மிகச்சிறந்த பேச்சாளராக இருந்தது மட்டுமன்றி அவரது ஆசீர்வாதம் மக்களை அறிவில் உயர்வடையச் செய்துள்ளது. ஷெய்குனா அவர்கள் மீது ஏனைய மதத்தினரும் பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.
வபாத்து மற்றும் மக்பறா :
ஹிஜ்ரி 173ல் ஷவ்வால் பிறை09 வெள்ளிக்கிழமை ஜும்.ஆவுடைய நேரம் ஷெய்குனா அவர்கள் இந்த உலகத்தைவிட்டும் விடைபெற்றார்கள். தொடுப்புழத்தில் அமைந்துள்ள நெய்னார் மஸ்ஜிதில் அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். யா அல்லாஹ்! அன்னாரின் பரக்கத்துகொண்டு ஆன்மீகத்தின் உயர் எல்லைகளை அடைய எமக்கும் அருள்பாலிப்பானாக. ஆமீன்.